JobVibe.lk - Sri Lanka Job Portal

வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம். சிராஜ்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம். சிராஜ் தனது பி.எச்.டி (PhD)  கல்வியை மேற்கொள்ள சீனா பயணமாவதை முன்னிட்டு அவரை வாழ்த்தி கெளரவிக்கும் நிகழ்வு அட்டப்பளம் ரிலக்ஸ் கார்டனில் இடம்பெற்றது.

இதன்போது 14 வருடங்களாக சாய்ந்தமருது லீட் த வே (Lead The Way) முன்பள்ளியின் ஆலோசகராகச் செயற்பட்டு வந்த விரிவுரையாளர் எம்.எம். சிராஜ், லீட் த வே  நிறுவனத்தின் பணிப்பாளர் ஐ.எம்..உவைஸ் அவர்களினால் பொன்னாடை போர்த்தியும் நிறுவனத்தின் அதிபர் எம்.எப்.பர்ஸானாவினால் நினைவுச் சின்னமும் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال