JobVibe.lk - Sri Lanka Job Portal

பெண்களின் தலைமைத்துவம் மற்றும் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்த ஐக்கிய சமாதானக் கூட்டணியின் மகளிர் மாநாடு

நூறுல் ஹுதா உமர் 

ஐக்கிய சமாதானக் கூட்டணியின் மகளிர் மாநாடு 2026, கட்சியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.

பெண்களின் உரிமைகள், சமூகப் பொறுப்புகள் மற்றும் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இம்மாநாட்டில், விசேட அழைப்பாளர்களாக சட்டத்தரணி இர்ஃபானா இம்ரான் மற்றும் கலாநிதி சந்திமா விஜேகுணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பெண்களின் உரிமைகள், சமூகத்தில் பெண்களின் வகிபாகம், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் பெண்களை வலுவூட்டுவதன் அவசியம் தொடர்பில் இருவரும் பெறுமதியான கருத்துக்களையும் உரைகளையும் வழங்கினர்.

பெண்களின் தலைமைத்துவம், வலுவூட்டல் மற்றும் சமூகப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தி, அமைதியானதும் நீதியானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியமும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

பெண்களின் திறன்களை வெளிக்கொணர்ந்து, அவர்களை சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் மேலும் முன்னிலைப்படுத்துவதற்கான உறுதியுடன் ஐக்கிய சமாதானக் கூட்டணியின் மகளிர் சக்தியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டது.














Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال