(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் பாலாவியில் உள்ள முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் ஏற்பாட்டில் (MWDT), பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் (Sexual and Reproductive Health and Rights) தொடர்பான திறன் மேம்பாட்டு (Capacity Building Programme) தொடர்பான செயலமர்வு ஒன்று வியாழக்கிழமை பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜூவைரியா முகைதீன் தலைமையில் இடம்பெற்றது
இச் செயலமர்வின் வளவாளராக வளவாளராக திருமதி செலஸ்டின் பிள்ளை குமுதினி கலந்த கொண்டார்
பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், தனிநபர் உரிமைகள், சுகாதார விழிப்புணர்வு மற்றும் தங்களது ஆரோக்கியம் தொடர்பான சரியான புரிதல் போன்ற முக்கிய விடயங்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு பயனுள்ள அறிவுசார் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதுடன்
SRHR தொடர்பான முக்கியமான தகவல்களை தெளிவாகவும் பயனுள்ள வகையிலும் பகிர்ந்து கொண்டு, பங்கேற்பாளர்களின் அறிவையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது
பெண்களின் சுகாதார அறிவையும், உரிமைகள் குறித்த விழிப்புணர்வையும் வலுப்படுத்துவதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் தன்னம்பிக்கையான சமூகத்தை உருவாக்க பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது என்பதுடன் எதிர்காலத்திலும் அதன் அர்ப்பணிப்பு சிறந்து விளங்கும் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



