JobVibe.lk - Sri Lanka Job Portal

பிரபல தென்னிந்திய நடிகை அபிராமி பங்கேற்ற பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி

நூருல் ஹுதா உமர் 

மணமகள் அலங்காரம், ஆரி வேலைப்பாடு, தையல், மருதாணி அலங்காரம் மற்றும் கேக் பேக்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பிரமாண்ட போட்டி நிகழ்ச்சியொன்று ஸ்டேயில் முபீ சலூன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் பல மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் முடிவில் திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பிரபல தென்னிந்திய நடிகை அபிராமி கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். இதன்போது மாணவர்களின் திறமைகளை பாராட்டிய அவர், அவர்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நிகழ்வுக்கு ஸ்டேயில் முபீ சலூன் ஏற்பாட்டாளர் உவய்ஸ் முபீனா தலைமை தாங்கினார். மேலும், க்ரியேட்டிவ் சலூஷன் ஒருங்கிணைப்புக் குழுவினரும் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் இணைந்து செயற்பட்டனர்.

பல்வேறு துறைகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

மாணவர்களின் பல்துறை திறமைகளை வெளிக்கொணர்வதற்கும், அவர்களை ஊக்குவிப்பதற்கும் இந்நிகழ்வு சிறந்த வாய்ப்பாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال