JobVibe.lk - Sri Lanka Job Portal

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதியை நீர்கொழும்பில் கைப்பற்றிய கடற்படை

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

நீர்கொழும்பு குடாபாடு கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை (2026 ஆகஸ்ட் 11) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதியை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் கெளனி நிறுவனத்தினால் நீர்கொழும்பு குடாபாடுவ கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான பதினான்கு (14) பைகள்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, குறித்த பைகளுக்குள் அடைக்கப்பட்டு, சட்டவிரோதமான முறையில் இந்நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு, கடற்படையினரின் நடவடிக்கையினால் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட சுமார் ஐந்நூற்று முப்பத்தைந்து (535) கிலோகிராம் பீடி இலைத் தொகுதி இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

மேலும், இந்நடவடிக்கையின் மூலம் சட்டத்தின் பிடியில் பெறப்பட்ட பீடி இலைத் தொகுதி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال