எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் கஜுவத்தை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முப்பெரும் நிகழ்வுகள் அண்மையில் (06) மிக கோலாகலமாக நடைபெற்றன.
பாடசாலை அதிபர் கே.டி.ஹாரூன் தலைமையில், மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதார நலனை உயர்த்தும் வகையில் இந்த முப்பெரும் நிகழ்வுகளோடு கூடிய திறப்பு விழாக்கள் மற்றும் பாராட்டு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் தரம் 5 மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான சிறப்பு வழிகாட்டல் நிகழ்வு, நவீன தொழில் நுட்ப அடிப்படையிலான கற்றல் சூழலை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள "ஸ்மார்ட் டிவி அறை" உத்தியோகபூர்வமாக திறப்பு விழா, மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் "ஆரோ பிளான்ட்" குடிநீர் கட்டமைப்பு திறப்பு விழா ஆகிய முப்பெரும் நிகழ்வுகளே நடந்தேறின.
இந்நிகழ்வுகளில் புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர் எம்.இஸ்மத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்தார்.
மேலும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.








