JobVibe.lk - Sri Lanka Job Portal

கண்டல்குடா வை.எம்.எம் ஏ புதிய கிளை அங்குரார்பணமும் புதிய நிர்வாகக் குழு தெரிவும்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி கண்டல்குடா கிராமத்தில் வை.எம்.எம்.ஏ. (YMMA) நிறுவனத்தின் புதிய கிளை அங்குரார்பணமும் புதிய நிர்வாகக் குழு தெரிவும் புத்தளம் வை எம் எம்.ஏ  கிளையின் ஏற்பாட்டில்  வை.எம்.எம்.ஏ புத்தளம் மாவட்ட பணிப்பாளர் எம்.டி எம் நபீல் ஆசிரியர் தலைமையில் கண்டல்குடா கரப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது.

கண்டல்குடா கிராமத்தில் வை.எம்.எம்.ஏ. கிளையொன்று ஆரம்பிக்கப்பட்டு அக் கிளையின் ஊடாக கிராம மக்களின் நலனுக்காக பல்வேறு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்திட்டப் பணிகளை முன்னெடுப்பதுடன் கண்டல்குடா கிராமத்து இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வலுவூட்டல் மற்றும் சமூக நலனுக்கான புதியதொரு பாதை உருவாகுதல் என்பதனை நோக்கமாக கொள்ளப்பட்டதுடன் புதிய நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

அதன் படி தலைவராக எம்.பீ.ஏ பாசிக் , உப தலைவராக எம்.எஸ்.எம்  சப்லான், செயலாளராக எஸ்.எம் றிஸ்மான், உப செயலாளராக எம் பி எம் பாஹீர், பொருளாளராக எம்.ஜே.எம் ஜம்றான் ஆகியோருடன் பல்வேறு துறை சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பகுதித் தலைவர்களாக  எம் ஆர்.எம் அஹ்னாப், எம் ஆர்.எம் நவுஷர், எம்.யூ..எம்  பைஸ் மற்றும் எம் பாஷித் ஆகியொரும் தெரிவு செய்யப்பட்டனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال