JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் கமாண்டர் KUBO Takayuki அவர்கள், புதன்கிழமை (2026 ஆகஸ்ட் 12) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காகக் கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களைச் சந்தித்தார்.

இவ்வுத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கமாண்டர் KUBO Takayuki அவர்கள், 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததனைத் தொடர்ந்து, இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்துச் சுமுகமாக உரையாடினார். 

மேலும், இவ்வுத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்குமிடையே நினைவுப்பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال