JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் தாருல் குர்ஆன் அல் கரீம் அரபு மத்ரஸா வளாகத்தில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் இஜ்திமா மைதானத்தில் அமைந்திருக்கின்ற புத்தளம் தாருல் குர்ஆன் அல் கரீம் அரபு மத்ரஸா வளாகத்தில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (28) மாலை இடம் பெற்றது.

மத்ரஸாவின் அதிபரும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் உப தலைவருமான அஷ்ஷெய்க் எம்.இஸட்.எம். சௌக்கி பஹ்ஜியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பி. ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி,  புத்தளம் பெரிய பள்ளியின் தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.ஆர்.எம். சலீம், புத்தளம் பகா பள்ளியின் தலைவர் எச்.எம்.எம்.ரபீக், புத்தளம் இஹ்யாவுல் உலூம் அரபுக்கல்லூரியின் அதிபர் ஏ.எல்.எம்.சனூஸ் ரஹ்மானி, அரபு மத்ரஸாக்களின் அதிபர்கள், மத்ரஸா ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

மத்ரஸாவில் நிலவும் மாணவர்களுக்கான இடப்பற்றாக்குறையை தீர்த்து வைக்கும் நோக்கில் கொடை வள்ளல்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் இந்த புதிய கட்டடம் அமையப்பெறவுள்ளது.

கட்டடத்திற்கான உதவிகளை பொது மக்களிடமிருந்து தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் அதிபர் அஷ்ஷெய்க் எம்.இஸட்.எம். சௌக்கி பஹ்ஜி தெரிவித்துள்ளார்.














Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال