எம்.யூ.எம்.சனூன்
வண்ணாத்திவில்லு பிரதேச செயலக பிரிவில் "அத்தம" கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மக்கள் ஒன்றுகூடல் மூலமாக, சுத்தமான நாடு, கருத்துக்களால் நிறைந்த சமூகம், வலுவான நாடு என்ற கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அனைத்து மதத் தலைவர்களும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், வண்ணாதவில்லு பிரதேச செயலாளர், வண்ணாதவில்லு பிரதேச சபை செயலாளர்,
தேசிய மக்கள் சக்தியின் குழுத் தலைவர் சுரங்க, பிரதேச சபை உறுப்பினர்கள்,
அனைத்து பாதுகாப்பு பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அதிகாரிகள் உட்பட பல அரச அதிகாரிகளும், கிராம மக்களும், பிரஜா சக்தி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இவர்கள் அனைவரின் பங்கேற்புடன் வண்ணாதவில்லு பிரதான குளத்தை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் அமைப்பை சுத்தம் செய்யும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன.







