JobVibe.lk - Sri Lanka Job Portal

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 பேர் கடற்படையினரால் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினர், பொலிஸார் மற்றும் மீன்பிடி பரிசோதகர் அலுவலகங்களுடன் இணைந்து, 2026 ஆகஸ்ட் 16 முதல் 27 வரையிலான காலப்பகுதியில் நாட்டின் கடற்பரப்பை உள்ளடக்கியவாறு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்பத்து மூன்று (33) நபர்கள் மற்றும் பதினெட்டு (18) டிங்கி படகுகள் ஆகியவற்றை கடற்படையினர் கைது செய்தனர்.  

இதன்படி, திருகோணமலை இலங்கந்தை, லங்காபடுன, பிளாக் பொயிண்ட், அரிசிமலை, நிலாவெளி, கல்குடா, கொக்குதொடுவாய், அடுக்குப்பாடு, கொக்கனட் பொயிண்ட், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக, கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி, கொட்பே, மூதூர், முல்லைத்தீவு, கொக்கிளாய், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்கள அலுவலகங்களிலும், கல்குடா மற்றும் நிலாவெளி பொலிஸ் நிலையங்களிலும் ஒப்படைக்கப்பட்டன.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال