JobVibe.lk - Sri Lanka Job Portal

சட்டவிரோதமாக மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வதற்கு வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் அநுராதபுரத்தில் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மருந்து மாத்திரைகளைத் தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர், சனிக்கிழமை (2026 ஆகஸ்ட் 29) திகதி அநுராதபுரம், மாத்தளை சந்தி பகுதியில் இலங்கை கடற்படையும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டுச் தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.  

இதற்கமைய, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் பண்டுகாபய நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய, அநுராதபுரம் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகத் தம்வசம் வைத்திருந்த 400 மருந்து மாத்திரைகளுடன் அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும், இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் மருந்து மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال