JobVibe.lk - Sri Lanka Job Portal

பப்புவா நியூ கினியா (Papua New Guinea) நாடாளுமன்றத்திற்கு கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் சிறப்பு விஜயம்.!

பப்புவா நியூ கினியாவின் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் பெல்டன் நமஹை (Belden Namah) சந்தித்து கலந்துரையாடல்.!

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தனிப்பட்ட விஜயமாக பப்புவா நியூ கினியாவிற்கு சென்றுள்ள நிலையில், இன்று (22) அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது, பப்புவா நியூ கினியாவின் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் பெல்டன் நமஹை சந்தித்து இருதரப்பு முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

அமைச்சர் பெல்டன் நமஹ், நாடாளுமன்ற வளாகத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விற்கு சுற்றிக்காட்டி அதன் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்ததுடன், இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நட்புரீதியான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்தச் சந்திப்பில், இலங்கை மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளுக்கிடையிலான சுற்றுலா மேம்பாடு, முதலீட்டு வாய்ப்புகள், தொழில் ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் பெல்டன் நமஹை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தருவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பு, பப்புவா நியூ கினியாவின் முன்னாள் பிரதமர் மெக்கோரே மொராட்டாவின் (Makere Morauta) துணைவியார் ரொஸ்லின் மொராட்டாவின் (Roslyn Morauta) ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பப்புவா நியூ கினியா Bismil Trading நிறுனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இக்ராம் சஹாப்டீன் அவர்களும் கலந்துகொண்டார்.

-- ஊடகப்பிரிவு











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال