JobVibe.lk - Sri Lanka Job Portal

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு (EASCCA) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விஜயம்..!

புற்றுநோயாளர்களுக்கு மனிதாபிமான நோக்கில் முற்றிலும் இலவசமாக சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கிவரும் கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் அழைப்பினை ஏற்று, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (5) அந்நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, அங்கு சிகிச்சை பெற்று வரும் மற்றும் தங்கியிருக்கும் புற்றுநோயாளர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் அன்போடு கலந்துரையாடிய அவர், அவர்களின் உடல்நிலை, தேவைகள் மற்றும் நலன்கள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் தலைவர் பௌஸ் ஹாஜியார் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களைச் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர், நிலையத்தின் தற்போதைய செயற்பாடுகள், எதிர்கொள்ளப்பட்டு வரும் சவால்கள், நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடினார்.

இதன்போது, நோயாளர்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் நிலையத்தின் பணிகளை வெகுவாகப் பாராட்டிய அவர், எதிர்காலத் தேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்குத் தன்னால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் ஆதரவுகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

மேலும், நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பண்ணை (Farm), திருமண மண்டபம் (Wedding Hall) உள்ளிட்ட வசதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நேரில் பார்வையிட்டு, அவற்றின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால பயன்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.


-- ஊடகப்பிரிவு









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال