JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கற்பிட்டி கோட்ட மட்டத்தில், எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அழகியற் கல்வியில் பெறுபேறுகளை அதிகப்படுத்துவதற்காக வேண்டி, அழகியற் கல்வி ஆசிரியர்களுக்கான செயலமர்வு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கற்பிட்டி கோட்ட மட்டத்தில், எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அழகியற் கல்வியில் பெறுபேறுகளை அதிகப்படுத்துவதற்காக வேண்டி, அழகியற் கல்வி ஆசிரியர்களுக்கான விஷேடமான செயலமர்வு அண்மையில் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

புத்தளம் வலய கல்வி பணிமனையின் அழகியற் கல்விக்கான உதவிக் கல்வி பணிப்பாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயகவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், கற்பிட்டி கோட்டக்கல்விப்ணிப்பாளர் ஏ.எம்.ஜவாதின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு இடம்பெற்றது.

ஆக அடிமட்டத்தில் உள்ள அழகியற்கல்வி பெறுபேற்றினை "எஸ்" தர பெறுபேறாகவும், "சீ" தர பெறுபேறுகளை "ஏ" தர பெறுபேறாகவும் மாற்றி அமைப்பதே இந்த செயலமர்வின் நோக்கமாகும்.

இந்த செயலமர்வின் பிரதான வளவாளராக புத்தளம் வலய கல்வி பணிமனையின் அழகியற் பாடத்துக்கான ஆசிரியர் ஆலோசகரும், முன்னாள் தேசிய கல்வி நிறுவகத்தின் அழகியற் பாட விரிவுரையாளரும், கல்வி அமைச்சின் அழகியற் கல்வி தேசிய வளவாளரும்,  நாடறிந்த ஓவியருமான கலாநிதி எம்.எம்.முஹம்மது கலந்து கொண்டு நடாத்தி வைத்தார். 

சுமார் 50 க்கும் மேற்பட்ட அழகியற் பாட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال