JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு மரக்கன்றுகள் அன்பளிப்பு.

எம்.யூ.எம்.சனூன்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயரிய நோக்கில், புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு பலன் தரும் மரக்கன்றுகள் வியாழக்கிழமை (23) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

"தொடர்பாடலும் ஊடக கற்கை நெறியும்" பாட வளவாளரான திரு. தேவநேசன் அவர்கள் இம்மரக்கன்றுகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கல்லூரி வளாகத்தை மேலும் பசுமையாக்கும் பரந்த முயற்சியின் ஒரு அங்கமாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மாணவிகளிடையே சுற்றுச்சூழல் சார்ந்த பொறுப்புணர்வை வளர்ப்பதோடு மரநடுகையின் அவசியம் மற்றும் இயற்கை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நடைமுறை ரீதியாக உணர்த்துவதற்கு இச்செயற்திட்டம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி) அவர்களது வழிகாட்டலில், கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும், புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரி அதிபருமான அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் இஸ்லாஹி, கல்லூரியின் முகாமையாளர் ஏ.ஆர்.பஸ்ரி ஆகியோரிடம் திரு. தேவநேசன் மரக்கன்றுகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال