(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ திங்கட்கிழமை (2026 ஜூலை 27) வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
இதற்கமைய, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, கடற்படையின் 27வது கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் கடற்படை தளபதிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அத்துடன், இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், கடற்படை தளபதியினால் அமைச்சருக்கு நினைவுப்பரிசு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.


