JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கு புத்தளம் மாவட்டத்தில் இருந்து தெரிவாகியுள்ள மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு.

எம்.யூ.எம்.சனூன்

இம்முறை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கு புத்தளம் மாவட்டத்தில் இருந்து தெரிவாகிச் செல்லவுள்ள மாணவர்களை, புத்தளம் மாவட்ட நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பான ராபிதத்துன் நளீமியினால் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று சனிக்கிழமை (11) மாலை புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றது.

ராபிதத்துன் நளீமியின் அங்கத்தவரும், புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபருமான எஸ்.ஆர்.எம்.முஹ்சியின் நெறிப்படுத்தலில், ராபிதத்துன் நளீமியின் புத்தளம் மாவட்ட தலைவரும், ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளருமான இஸட்.ஏ.சன்ஹீர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஆன்மீக உரைகள், ஜாமிஆ நளீமியா தொடர்பான வரலாற்று உரைகள், வீடியோ பிரசன்டேஷன் என்பனவும் இடம்பெற்றதோடு புத்தளம் மாவட்டத்திலிருந்து ஜாமிஆக்கு தெரிவாகியுள்ள 07 மாணவர்கள் வரவேற்கப்பட்டு அன்பளிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

என்.பாசிம் அஹமட் - புத்தளம்,

எம்.எம்.அய்யாஷ் அஹமட் - பெருக்குவட்டான், ஏ.எச்.அஹ்மத் அப்லால் - அல் காசிம் சிட்டி, 

எம்.பி.எச்.எம்.ஹம்தான் - ஏத்தாளை,

எம்.எம்.மிர்சால் - பூலாச்சேனை,

ஐ.எஸ்.எம்.அம்மார் - கடையாமோட்டை,

எஸ்.எம். ஆகீப் -  ஹுசைனியாபுரம், பாலாவி ஆகிய மாணவர்களே இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.


















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال