JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் போதைப்பொருள் தொடர்பான செயலமர்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பெரியகுடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கான போதைப்பொருள் தொடர்பான  விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று திங்கட்கிழமை ( 20) கற்பிட்டி பெரியகுடியிருப்பு வாழைத்தோட்டம் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது 

இவ் விழிப்புணர்வு செயலமர்வில் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் பத்திரன பொலிஸ் அதிகாரி செனவிரத்ன பெரியகுடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் றியாஸ் பெரியகுடியிருப்பு பிரஜா சக்தியின் தலைவர் நிஹால், புதுக்குடியிருப்பு பிரஜா சக்தி மஜீத்கான் மனித உரிமைகள் அமைப்பின் கற்பிட்டி பிரதேச தலைவர் மௌலவி மல்ஹார் சமூக செயற்பாட்டாளர் நிரோஷன் என பலரும் கலந்து கொண்டு போதைப் பொருள் விற்பனையாளர்கள் மற்றும் பாவனையாளர்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை பொது மக்களுக்கு வழங்கினர் 

மேலும் போதைப்பாவனை தொடர்பாகவும் கற்பிட்டி பிரதேசத்தில் அண்மைய காலங்களில் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் மேற்க் கொண்ட விஷேட சுற்றிவளைப்புக்கள் அதன் ஊடாக பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது தொடர்பாகவும் தெளிவூட்டப்பட்டதுடன் எதிர்காலத்தில் போதைப் பொருள் வியாபாரிகள் பாவனையாளர்கள் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு வழங்க வேண்டிய வழி முறைகள் தொடர்பாக தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال