JobVibe.lk - Sri Lanka Job Portal

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சாம்பூ பக்கெட்டுகள் அடங்கிய தொகுதியை தலைமன்னாரில் கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் 'தம்மென்னா' நிறுவனத்தினால் திங்கட்கிழமை (2026 ஜூலை 13) தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சாம்பூ பக்கெட்டுகள் அடங்கிய தொகுதி ஒன்று  சட்டத்தின் முன் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை கடற்படைக் கப்பலான தம்மென்னா நிறுவனத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அவ் கடற்கரைப் பகுதியில் ஒதுங்கியிருந்த, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்றதாக சந்தேகிக்கப்படும் சுமார் 5,386 சாம்பூ பக்கெட்டுகள் கடற்படையினரால் கண்டறியப்பட்டுள்ளன.  

இந்நடவடிக்கையின் போது கடற்படையினரால் கண்டறியப்பட்ட சாம்பூ பக்கெட்டுகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال