JobVibe.lk - Sri Lanka Job Portal

முந்தல் மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் விருதோடை கிளையின் தேர்தல் முடிவுகள்.

 (நமது நிருபர்)

முந்தல் மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச் சபை தெரிவுக்கான தேர்தல் சனிக்கிழமை (11)  விருதோடை கிராம சேவையாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி ஒரு அணியாகவும், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டன.

இதில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி சார்பில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜே. எம். பைசல் தலைமையில் ஆறு உறுப்பினர்களும், எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ. ஆர். எம். ரபாத் அமீன் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (SLFP) ஆகிய கட்சிகளின் சார்பில் மூன்று உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். 

இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம். ஐ. எம். ஆஷிக் தலைமையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வியுற்றனர்.

இதே வேளை குறித்த கிளையிலிருந்து பொதுச் சபைக்கு ஆளும் கட்சியிலிருந்து ஆறு உறுப்பினர்களும், எதிர்க்கட்சியிலிருந்து மூன்று உறுப்பினர்கள் உட்பட ஒன்பது உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தேசிய மக்கள் சக்தி.

1.எம். எச். எம். அஸ்கர் - 93

2. எம்.ஜே. எம். பைஸல் பாராளுமன்ற உறுப்பினர்) - 83

3.பீ. எஸ். றிஷாட் ரஹ்மான் - 103

4.எம். ஏ. எம். பைஸல்  - 76

5.ஆர். எம். பஸ்மின் - 88

6.என். எம். பௌஸி  - 78


ஐக்கிய தேசிய கட்சி/ ஸ்ரீ. ல. சுதந்திர கட்சி

1.எஸ். ஏ. ஏ. ஹகீம்  - 88

2.எம். என். எம். றினோஸ் - 93

(கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்)

3.ஏ. ஆர். எம். ரபாத் அமீன்  - 80

(முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்)


ஐக்கிய மக்கள் சக்தி 

1.எம். கே. எம். நவாஸ் - 61

2.ஏ. எஸ். எம். றியாஸ் - 63

3.எம். ஏ. றஹீம்  - 55

4.ஏ. எஸ். எம். சுப்யான் - 55

5.எம். எஸ். எம். இம்தியாஸ் - 55

6.எம். ஐ. எம். ஆஷிக்  - 61

(கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்)




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال