JobVibe.lk - Sri Lanka Job Portal

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்.

எம்.யூ.எம்.சனூன்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலை, புத்தளம் மாநகர சபை, வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகம் மற்றும் மஸ்ஜித் சம்மேளனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாம் மற்றும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி (04)

சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இம்மருத்துவ முகாமில் 96 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவைகளையும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் பயனுள்ளதாகப் பெற்றுக்கொண்டனர்.


வழங்கப்பட்ட மருத்துவ சேவைகள்

மூட்டு வலி, நரம்பு வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி

மூட்டு வீக்கம் மற்றும் முடக்கு வாதம்,

குதிகால் வலி,

மலச்சிக்கல் மற்றும் குடல் தொடர்பான நோய்கள்,

நீரிழிவு நோய்,

அதிக இரத்த அழுத்தம்,

அஜீரணம், வயிற்று வலி மற்றும் காய்ச்சல்,

பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள்

உடல் மற்றும் மூட்டு தொடர்பான சிகிச்சைகள்,

அனைத்து வகையான சரும நோய்கள்

மூலம் மற்றும் குடல் தொடர்பான பிரச்சினைகள்,

ஆண் மற்றும் பெண் பாலியல் தொடர்பான ஆலோசனைகள்,

ஊசி மருத்துவ சிகிச்சை,

உளவியல் ஆலோசனைகள் என்பன வழங்கப்பட்டன.


இலவச மருத்துவ பரிசோதனைகள்

இரத்தச் சர்க்கரை,

கொலஸ்ட்ரால்,

இரத்த அழுத்தம்,

கண் பரிசோதனை என்பனவும் இடம்பெற்றன. 


இலவச மருந்து வழங்கல்

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டன.


டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை வைத்தியர் எம்.எஸ்.முனவ்வர் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் வழங்கினார்.


மருத்துவ சேவையில் பங்கேற்ற வைத்தியர்கள்,

வைத்தியர் முனவ்வர்

வைத்தியர் பாஹிம்

வைத்தியர் நைஜில்

வைத்தியர் பஹ்மி

வைத்தியர் ஹில்மியா மற்றும் 

பயிற்சி வைத்தியர்கள்.


இந்நிகழ்விற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அனைத்து வைத்தியர்களுக்கும், இணை ஏற்பாட்டாளர்களுக்கும், மாநகர சபை ஊழியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  புத்தளம் நகரக் கிளை தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال