எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குடும்பங்களுக்கு நான்காம் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (02) புத்தளம் பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.பைசல் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வின்போது புயலினால் முழுமையாக பாதிக்கப்பட்ட 26 வீடுகளுக்கும், 148 பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும், 172 வர்த்தகர்களுக்குமான இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் கீர்த்தி ஸ்ரீ பண்டார , புத்தளம் பிரதேச செயலாளர் எஸ்.பி.விதானகே , உதவி செயளாலர் வர்ண ஞாசூரிய, புத்தளம் மாநகர சபை மற்றும் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், புயலினால் வாழ்வாதார பாதிப்புக்குள்ளான முழு மற்றும் பகுதியளவு உரிமையாளர் களும், வர்த்தகர்களும் கலந்துகொண்டனர்.









