எம்.யூ.எம்.சனூன்
தித்வா புயல் காரணமாக புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த இரண்டு வீடுகளை முழுமையாக மீள கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (18 ) சனிக்கிழமை மணல்தீவு கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.
இந்நிகழ்வு புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவரும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஜே.எம்.பைசல் தலைமையில், புத்தளம் பிரதேச சபையின் மணல்தீவு வட்டார உறுப்பினரும் பிரஜா சக்தியின் சமூக மேம்பாட்டு சபை தலைவருமான எம்.ஜிப்ரியின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் மணல்தீவு கிராம அரச உத்தியோகத்தர்கள், மணல்தீவு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், கிராம மக்கள் மற்றும் புயலினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பயனாளிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.






