JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் வலய கல்விப் பணிமனை நடாத்திய பாடசாலை நூலகங்களின் நூலகர்களுக்கான செயலமர்வு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் வலய கல்விப் பணிமனை நடாத்திய பாடசாலை நூலகங்களின் நூலகர்களுக்கான செயலமர்வு திங்கட்கிழமை (09) புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. 


இதில் பிரதான வளவாளராக புத்தளம் வலய கல்விப் பணிமனையின் வேண்டுகோளின் பேரிலும், புத்தளம் மாநகர சபை முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மதின் ஆலோசனைக்கு அமைவாகவும் புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகரும்,  இலங்கை நூலகர் சங்கத்தின் விரிவுரையாளருமான கே. எம்.நிஷாத். நூலகர் சேவை தரம் -1 (ASLLA, BA Hon’s LIS, HDIPLIS) கலந்து கொண்டார்.


இச்செயலமர்வில் நூல்களை சேர்வு பதிவேட்டில் பதிவு செய்தல், நூல் கணக்கெடுப்பு, அதன் சாதக பாதகங்கள் , நூல் அகற்றுவற்கான காரணங்கள், அதன் நன்மை தீமைகள் என்பன பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டன.


இந்த நிகழ்வில் கல்பிட்டி கோட்டக்கல்விப் பணிப்பாளர்  ஏ.எம்.ஜவாத் மற்றும் புத்தளம் வலய கல்விப்பணிமனையின் நூலகத்துக்கு பொறுப்பான அதிகாரி திருமதி. ஆர்.பி.பி.ஜயரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال