(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் மாவட்டத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, பிரபல விசேட வைத்திய நிபுணர் திமுத் பொன்வீர சுகாதார அமைச்சினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் உன்னத நோக்கோடு, புதன்கிழமை (17) மாதம்பையில் அமைந்துள்ள மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்
மதத் தலைவர்களின் ஆசிர்வாதங்களுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுமித் அத்தநாயக்க, பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் தினேஷ் கொக்கலகே மற்றும் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் லசந்த லியனகே ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

