(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் ஏற்பாட்டில் நாகவில்லு மற்றும் பாலாவி சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான சமூக அபிவிருத்தியில் ஆண் சிறுவர்களும் பெண் சிறுமிகளும் ஆற்றும் பங்களிப்பு என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வுகள் இரு தினங்கள் இடம்பெற்றது
பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் அலுவலகம் மற்றும் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய இரு இடங்களில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வுகளின் வளவாளராக முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திருமதி ஜூவைரியா முஹைதீன் கலந்து கொண்டார்.
சமூக முன்னேற்றத்தில் ஆண் சிறுவர்களும் பெண் சிறுமிகளும் சமமாக பங்களிப்பதன் அவசியம், ஒத்துழைப்பு, சமூகப் பொறுப்புணர்வு, தலைமைத்துவம் மற்றும் நல்ல பண்புகள் குறித்து தெளிவூட்டப்பட்டதுடன். சிறுவர் கழக உறுப்பினர்கள் எவ்வாறு சமூகப் பொறுப்புணர்வை வளர்த்துக்கொள்வது, அத்தோடு பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் எதிர்கால சமூகத் தலைவர்களாக உருவாகுவதற்கான ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இவ் விழிப்புணர்வு நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



