எம்.யூ.எம்.சனூன்
மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் அண்மையில் (23) கல்பிட்டி ஸ்டோர்ட்போர்ட் பாடசாலையில் சர்வதேச தரம் வாய்ந்த பெறுமதியான புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நல்ல பணிக்கு முஸ்லிம் செரிட்டி செரண்டிப் ஸ்ரீ லங்கா அமைப்பின் பணிப்பாளர் முஜாஹித் நிசார் அவர்களின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட்டது.
பாடசாலை நிர்வாகப் பணிப்பாளர் திருமதி ருக்ஷானி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்பிட்டி வை.எம்.எம்.ஏ. கிளையின் தலைவர், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஷாபியும் கலந்து கொண்டார்.
வழங்கப்பட்ட புத்தகங்கள் மாணவர்களின் அறிவு வளர்ச்சி, வாசிப்பு பழக்கம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு உதவியாக அமையும் என முஸ்லிம் செரிட்டி செரண்டிப் ஸ்ரீ லங்கா அமைப்பின் பணிப்பாளர் முஜாஹித் நிசார் தெரிவித்தார்.


