(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
சிலாபம் கருக்குப்பனை பகுதியில் இலங்கை கடற்படை வெள்ளிக்கிழமை (20) நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் ஐநூற்று ஏழு (507) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஒரு (01) லொரியுடன் மூன்று (03) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான தம்பபன்னிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை (20) சிலாபம் கருக்குப்பனை பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு சரக்குந்து (01) ஆய்வு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, பதினான்கு (14) பைகளில் கட்டப்பட்ட சுமார் ஐநூற்று ஏழு (507) கிலோகிராம் பீடி இலைகளைக் கொண்ட ஒரு (01) லொரியுடன் மூன்று (03) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கலேவெல பகுதியைச் சேர்ந்த 45 முதல் 66 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள், லொரி மற்றும் பீடி இருப்பு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

