கற்பிட்டியில் பிரதான பாதையில் அரச மரத்தின் கிளை முறிந்தனால் சில மணிநேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்து
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி நகர மத்தியில் விஜய கடற்படைத் தளத்திற்கு அருகில் காணப்பட்ட பழமையான அரச மரத்தின் பாரிய கிளை ஒன்று கற்பிட்டி பிரதேசத்தில் தற்போது நிலவும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக பாதையின் குறுக்கே முறிந்து விழுந்ததன் காரணமாக சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேற்படி சம்பவம் புதன்கிழமை(10) இரவு நடந்துள்ளது.
எனினும் கற்பிட்டி பிரதேச சபையின் உப தவிசாளர் சமன் குமார ஹேரத் உடனடியாக செயற்பட்டு கற்பிட்டி விஜய கடற்படையினருடன் இணைந்து பொது மக்களின் உதவியுடன் சில மணிநேரங்களிலேயே பாதையின் குறுக்கே விழுந்த மரக்கிளைகள் வெற்றி அகற்றபட்டு மக்கள் போக்குவரத்து சீர் செய்யபட்டமை குறிப்பிடத்தக்கது.





No comments