JobVibe.lk - Sri Lanka Job Portal

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள இஸ்லாமிய புதுவருட வாழ்த்துச் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்.

புனிதமிக்க ஹிஜ்ரி 1448-ஆம் ஆண்டு ஆரம்பமாகும் இந்நாளில், அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது உளம் கனிந்த  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நபி (ஸல்) அவர்களின் தியாக வரலாற்றைப் பேசும் இந்த ஹிஜ்ரி ஆண்டு, நம் வாழ்வில் நன்மைகளை நோக்கி மாறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும். இப்புதிய ஆண்டில் நாம் உலகியல் விடயங்களில் கவனம் செலுத்துவதை போன்று, நமது மார்க்கக் கடமைகளிலும் பேணுதலோடு அதிக கவனம் செலுத்த பழகிக்கொள்ள வேண்டும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவரது இன்றைய நாள் நேற்றைய நாளை விட சிறந்ததாக அமைகிறதோ, அவரே வெற்றியாளர் ஆவார்."

இப்புதிய ஆண்டில் நமது சமூகத்திலும், நம் தாய்நாட்டிலும் நற்செயல்களும், அமைதியும், சகவாழ்வும் மேலோங்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

நம் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தையும், ஈமானிய பலத்தையும், மார்க்கக் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றும் தௌபீக்கையும் அல்லாஹ் தந்தருள்வானாக!

ஆமீன்.

கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

(பாராளுமன்ற உறுப்பினர்)




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال