JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் பொலிஸார் கைப்பற்றிய சொகுசு வாடகைக்காரின் சாரதி உட்பட மூவருக்கும் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி நகரில் போதைப்பொருள் விற்பனைக்கு பயண்படுத்துவதற்காக பொலன்னறுவையில் இருந்து வாடகைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஞாயிற்றுக்கிழமை (07)  இரவு மூவருடன் சொகுசு கார் ஒன்றை கற்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கபில பிரேமதாசவின் வழிகாட்டலின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் எஸ் எஸ் பெர்ணான்டோ தலைமையிலான விஷேட பொலிஸ் குழு கைப்பற்றியது 


அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் 54 ம் பிரிவின் கீழ் போதைப் பொருள் பாவித்தல், விற்பனை செய்தல், விநியோகம் செய்தல் என்பவற்றின் கீழ் கைப்பற்றிய சொகுசு கார் மற்றும் மூன்று சந்தேக நபர்கள் கற்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படனர்.


மேற்படி வழக்கினை விசாரித்த நீதிமன்ற நீதிபதி கைப்பற்றப்பட்ட வாடகை நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு காரை இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையின் கீழ் விடுவிப்பதற்கும் மேலும் கைது செய்யப்பட்ட மூவரையும் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் 54 ம் பிரிவின் கீழ் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال