JobVibe.lk - Sri Lanka Job Portal

"உமரியன்ஸ்" மீண்டுமொரு வரலாற்றுச் சாதனை.

எம்.யூ.எம்.சனூன்

புளிச்சாக்குளம் உமர் பாறூக் பாடசாலை மாணவர்கள் வரலாற்றில் முதல் தடவையாக மற்றுமொரு சாதனையை பாடசாலைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர்.

Sri Lanka Schools Individual Chess Championship 2026 சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற பாடசாலை மாணவர்கள் மாகாண மட்டத்தில் சிறப்பான வெற்றிகளைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகி புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.

போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களான கே.ஆர்.எம்.ரஷாத் முதலாம் இடத்தை பெற்று சம்பியனாகவும், ஏ.எப்.சஹ்லா முதலாம் இடத்தை பெற்று சம்பியனாகவும், எம்.கே.மதன்குமார் இரண்டாம் இடத்தையும், எம்.ஆர்.ரிஹாம் மெரிட் விருதினையும் பெற்றுக்கொண்டனர்.

இம்மாணவர்களின் சிறப்பான சாதனையானது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

பாடசாலை அதிபர் எம்.யூ.எம். ஷாஜஹானின் வழிகாட்டல், ஆசிரியை எம்.எஸ்.பாத்திமாவின் சிறந்த பயிற்றுவித்தலின் இந்த வரலாற்று வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது.

தேசிய மட்டப் போட்டியிலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்று பாடசாலையின் பெயரை உயர்த்திட, பாடசாலை அதிபர் எம்.யூ.எம்.சாஜஹான் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال