JobVibe.lk - Sri Lanka Job Portal

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட முழு மற்றும் பகுதியளவு சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு.

 எம்.யூ.எம்.சனூன்

முந்தல் பிரதேச செயலகப் பிரிவின் குடும்பங்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு (28)  ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புயலினால் வாழ்வாதார பாதிப்புக்குள்ளான வர்த்தகர்களுக்கான  இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைப்பாளரும், முந்தல் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி குழு தலைவருமான கயான் ஜானக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.பைசல், முந்தல் பிரதேச செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال