தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்தின் நேரடி நிதி உதவித் திட்டத்தின் கீழ், நிரந்தர வீடற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்காக 10 இலட்சம் ரூபாய் நிதி உதவியிலான வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், இன்று (18) கனமூலை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் வீடமைப்பிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு, பிரஜாசக்தி தலைவர் ரமீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், முந்தல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கயான் ஜானக, முந்தல் பிரதேச செயலக 'Clean Sri Lanka' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஜீ. இருசால், முந்தல் பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் பிரஜாசக்தி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன், விஷேட அழைப்பை ஏற்று கனமூலை பெரிய பள்ளிவாசலின் உப தலைவர், பொதுச் சபை உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.












