JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்யாலயத்தில் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா!.

புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்யாலயத்தில் க. பொ. த சாதாரண தரம் மற்றும் க. பொ. த. உயர்தர பரீட்சைகளில் சித்தி அடைந்து பாடசாலைக்கும், ஊருக்கும், பெற்றோருக்கும், பெருமை சேர்த்திருக்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா பாடசாலையின் அதிபர் ஐ. என். எம். எம். லாஹிர் தலைமையில் எதிர்வரும் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொத்தாந்தீவு ஜும்ஆப் பள்ளி கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு  அதிதிகளாக நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஓய்வு பெற்ற செயலாளர் ஏ.சி.எம் நபீல், புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் உதவி கல்விப் பணிப்பாளர் (ஆசிரியர் விவகாரங்கள்) திரு எம். கமலேந்திரன், புத்தளம் தெற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம். ஐ. எம். நௌசாத், ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர்களான எஸ்.எம். எம். ஹனிபா, ஏ. எச்.எம். ஹபீஸ் மற்றும் கொத்தாந்தீவு ஜும்ஆப் பள்ளித் தலைவர் கே. எம். இந்தியாஸ் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

காலம் :- 30/06/2026, செவ்வாய்க்கிழமை

நேரம் :- 9.00am

இடம் :- கொத்தாந்தீவு ஜும்ஆ மஸ்ஜித் கலாச்சார மண்டபம்.

குறித்த நிகழ்வுக்கான ஏற்பாட்டினை பாடசாலையின் அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலை பழைய மாணவ, மாணவியர் சங்கம் ஏற்பாடு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஊடக அனுசரணை மதுங்குளி மீடியா. நிகழ்வுகள் யாவும் மதுரங்குளி மீடியா முகநூல் வாய்லாக நேரலையாக பார்வையிடலாம். நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறார் சிரேஷ்ட ஊடகவியலாளரும், V-First Media பணிப்பாளருமான அறிவிப்பாளர் ஜுனைத் எம். ஹாரிஸ்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال