JobVibe.lk - Sri Lanka Job Portal

பழைய எலுவன்குளத்தில் காணப்படும் நெலும் குளம் புனரமைப்பு.

எம்.யூ.எம்.சனூன்

வண்ணாத்திவில்லு பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தினால் சேதமடைந்த பழைய எலுவன்குளத்தில் காணப்படும் நெலும் குளம் புனரமைப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (30) ஆரம்பிக்கப்பட்டன. 

இந்நிகழ்வு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின்  பிரதி அமைப்பாளருமான கயான் ஜானக மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம், கல்பிட்டி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம். பைசல் ஆகியோரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன், வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்களின் பங்கேற்புடன்,  நீர்ப்பாசன திணைக்களத்தினால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இதில் பிரதேசத்தின் அனைத்து மதங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் மத தலைவர்களும், வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் தலைவரும், பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال