JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி நல்லாந்தழுவை மன்சூர் அகடமியினால் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் கௌரவிப்பு

மதுரங்குளி நல்லாந்தழுவையில் இயங்கி வரும் மன்சூர் அகடமியினால்  ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

மன்சூர் அகடமியின் பணிப்பாளர் முஹம்மது மன்சூர் அஹ்மத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மன்சூர் அகடமின் அதிபர் என்.எம்.எம். நஜீப் மற்றும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் உட்பட மன்சூர் அகடமியின் ஸ்தாபகத் தலைவர் பீர் முகமது மன்சூர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த இந் நிகழ்வானது மன்சூர் அகடமியில் ஆரம்பப் பிரிவான தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு முதலாம் தவணைப் பரீட்சை நடாத்தப்பட்டு, அதில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் முகமாக பதக்கம் அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال