JobVibe.lk - Sri Lanka Job Portal

புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலய 2025 சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்.

எம்.யூ.எம்.சனூன்

2025 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் வரலாற்றில், வரலாற்று சாதனையாக புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக நான்கு மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அது மட்டுமன்றி, பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலையின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளனர்.

இவ்வெற்றியானது மாணவர்களின் கடின உழைப்பு, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பெற்றோரின் ஒத்துழைப்பு மற்றும் பாடசாலை சமூகத்தின் கூட்டு முயற்சியின் பலனாகும்.

பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் முழுப் பாடசாலை சமூகமும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் எதிர்கால கல்வி மற்றும் வாழ்வியல் பயணங்களிலும் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகின்றனர்.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال