JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உயர் தர மாணவர்களுக்கான பொது அறிவு கருத்தரங்கு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம்  ரீபிரஸ் மெட்ரோ கெம்பஸ் (Refresh Metro Campus) அனுசரணையில் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உயர் தர மாணவர்களுக்கான பொது அறிவு கருத்தரங்கு ஒன்று வியாழக்கிழமை (25) பாடசாலையின் அதிபர் பீ.எம் முஸ்னி தலைமையில் நடைபெற்றது. 

இதில் வளவாளராக நிக்கவெரட்டி கல்வி வலையத்தின் ஆசிரியர் ஸ்தாபனப் பிரிவின் பிரதி கல்வி பண்ணிப்பாளர் எஸ்.எல்.எம் றியாஸ் (SLEAS) கலந்துகொண்டு மாணவர்களுக்கான பொது அறிவு மேம்பாடு அதன் பயன்கள் கற்றுக்கொள்ளும் விதம் போன்ற பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இக்கருத்தரங்கில் உடப்பு, ஆண்டிமுனை, கட்டைக்காடு, கொத்தாந்தீவு, பெருக்குவட்டான் அல்-மின்ஹாஜ் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال