(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இஸ்லாமிய புது வருடமான முஹர்ரம் மாதத்தினை சிறப்பிக்கும் முகமாக புதன்கிழமை இரவு விஷேட மார்க்க சொற்பொழிவு ஒன்று அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம் மிஸ்பாஹ் (உஸ்வி) இனால் நிகழ்த்தப்பட்டது.
இஸ்லாமிய புது வருடமான ஹிஜ்ரி 1448 ஐ வரவேற்போம் மற்றும் முஹர்ரம் மாதத்தின் சிறப்புக்கள் புதிய வருடத்திற்கான திட்டமிடல்களை எவ்வாறு அமைத்துக் கொள்வது நோற்க்கப்பட வேண்டிய நோன்புகள் என்பன பற்றிய தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டதுடன் இறுதியில் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


