(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
மலர்ச்சியான உலக வாழ்வு மகத்தான மறுமை வெற்றி என்ற கருப்பொருளில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு புத்தளம் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் வெகு விமர்சையாக நேற்று சனிக்கிழமை (13) இடம்பெற்றது.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தற்போதைய அமீர் உஸ்தாத் எச் எம் உஸைர் (இஸ்லாஹி), அஷ்ஷெய்க் ஹுஸ்னி முபாரக் (இஸ்லாஹி) ஆகியோரின் சிறப்புரைகள் இடம்பெற்றது.
பெண்களும் கலந்து கொள்வதற்கான விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் பள்ளிவாசலின் மண்டபங்கள் நிறைந்து பெருந்திரளானோர் இம்மாநாட்டில் கலந்து பயன்பெற்றனர்
இம்மாநாட்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியின் பரிசளிப்பு நிகழ்வை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் உப பிராந்திய நாஸிம் ரமீஸ் நெறிப்படுத்தியதுஞன் ஏனைய நிகழ்வுகளை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் உப பிராந்திய செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம் இர்பாக் (நளீமி) தொகுத்து வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.








