JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கஜுவத்தை முஸ்லிம் வித்தியாலயம் வகுப்பறைப்போட்டிகள்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கஜுவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தில் வகுப்பறை போட்டிகள் வியாழக்கிழமை காலை (14) பாடசாலை அதிபர் கே.டீ.ஹாரூன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றன.


இந்நிகழ்வில் புத்தளம் வலயக்கல்வி பணிமனையின் வர்த்தக பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகர் திரு. இஸ்மத், தெற்கு கோட்ட விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் செய்யது சாஹிர், சமய பாட ஆலோசகர் திருமதி.ஸ்ரீமதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 


சீரற்ற கால நிலையையும் பாராது பாடாசாலைக்கு வருகை தந்த அனைவருக்கும் அதிபர் கே.டீ.ஹாரூன் நன்றி தெரிவித்துள்ளார். 


மேலும் இந்தப் போட்டிகள் சிறப்பாக நடைபெற உதவிய ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவ, மாணவிகள், பள்ளி நிர்வாகத்தினர், நலன் விரும்பிகள் மற்றும் மாணவர்களுக்கான பரிசில்களுக்கான அனுசரணைகளை வழங்கிய அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் மேலும் நன்றியை தெரிவித்துள்ளார்.













Previous Post Next Post

نموذج الاتصال