JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி கோட்ட மட்ட கிரிக்கெட் பள்ளிவாசல்துறை பாடசாலை முதலாம் இடம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட்  போட்டியில் பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தை பெற்று வலய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது


இறுதிப் போட்டியில் பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய கிரிக்கெட் அணியும் பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலய கிரிக்கெட் அணியும்  மோதிக் கொண்டது மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப் போட்டியில் பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அணி வெற்றி பெற்று முதலாம் இடத்தை பெற்று வலய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எம் றிஸ்கான் தெரிவித்தார் 


மேலும் பாடசாலையின் வெற்றிக்காக அயராது உழைத்து, திறமையாக விளையாடி  பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் அவர்களை வழிநடத்தி ஊக்குவித்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய ஆசிரியர் எம். எம். முஸம்மில் ,விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம். என். எம். சராஃப் ஆகியோருக்கும் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال