JobVibe.lk - Sri Lanka Job Portal

புளிச்சாக்குளம் பாடசாலையின் உமரியன்ஸ் கரப்பந்தாட்ட அணி மாகாண மட்டத்திற்கு தெரிவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில்  கடந்த செவ்வாய் மற்றும் புதன் (19,20) ஆகிய தினங்களில் ஆனமடுவ நந்தமித்ர சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற புத்தளம் வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டிகளில் புத்தளம் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் உமரியன்ஸ் கரப்பந்தாட்ட அணி 18 வயது பிரிவில் முதலாம் இடத்தையும் 16 வயது பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம் யூ எம் சாஜஹான் தெரிவித்துள்ளார்


பாடசாலையின் உமரியன்ஸ் கரப்பந்தாட்ட அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த பயிற்றுவிப்பாளர்கள் பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் மாகாண மட்டத்திலும்  சாதனை படைக்க வேண்டும் எனவும் பிரார்த்திப்பதாகவும் மேலும் அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post

نموذج الاتصال