Breaking News

தில்லையூர் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் இருவர் வலய மட்டத்திற்கு தெரிவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி கோட்ட மட்ட விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (08)  மாம்புரி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் இருவர் வலய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எஸ் எம் அரூஸ் தெரிவித்துள்ளார் 


இதன்படி கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவி இஸ்மா பலா 12 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் உயரம் பாய்தல் போட்டியில் முதலாம் இடத்தையும் மாணவன் என் எம் றுவைத் 14  வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று வலய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும் இம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருக்கு தமது பாடசாலை சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments