JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி கோட்ட மட்ட விளையாட்டு போட்டிகள் அல் அக்ஸாவிலிருந்து மாம்புரி பாடசாலைக்கு திடீர் இடமாற்றம்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி கோட்ட மட்ட விளையாட்டு போட்டிகள் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வந்த நிலையில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை நிர்வாகத்தினரின் ஒத்துழைப்பு இன்மை காரணமாக உடனடியாக செவ்வாய்க்கிழமை (05) முதல் கற்பிட்டியிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மாம்புரி பாடசாலையின் விளையாட்டு மைத்னத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிமணையின் உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் எஸ்.ஐ.எம் பளீல் தெரிவித்தார்.


கற்பிட்டி கோட்ட மட்ட விளையாட்டு போட்டிகள் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைத்னத்தில் இடம்பெற்று வந்த நிலையில் அல் அக்ஸா தேசிய பாடசாலை நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இன்மை காரணமாக திங்கட்கிழமை (04) முதல் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு மீதமாக உள்ள மெய்வல்லுனர் போட்டிகள் அனைத்தும் மாம்புரி பாடசாலையின் விளையாட்டு மைத்னத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال