Breaking News

புத்தளம் பாத்திமா பாடசாலையில் புதிய Computer Laboratory திறந்து வைக்கப்பட்டது.

எம்.யூ.எம்.சனூன், எம். எச். எம். சியாஜ்

இலங்கை கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தித்வா புயல், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு computer , computer laboratory வழங்கும் வேலைத்திட்டம் Technocity (pvt) Ltd - laptop.lk நிறுவனத்தின் அனுசரனையுடன்  நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 


இதன் தொடர்ச்சியாக 28 ம் திகதி செவ்வாய்க்கிழமை புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு Technocity  (Pvt) Ltd - laptop.lk நிறுவனத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட  சுமார் 6 மில்லியன் ரூபா பெறுமதியான  21 Computers , 21 தளபாடங்கள் உள்ளடங்கிய Computer laboratory திறந்து வைக்கப்பட்டது.


பாடசாலையின் அதிபர் திருமதி ஏ.எல். சரீனா பர்வீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், இதனை அன்பளிப்பு செய்த Techno city (Pvt) Ltd  - laptop.lk நிறுவனத்தின் தவிசாளர் முஹம்மது இஸ்மாயில் பௌமி, Head of Services ஹேமல் சந்திரரத்ன, விற்பனை முகாமையாளர் முஹம்மது காலிம் உள்ளிட்ட குழுவினர், வடமேல் மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி ஜே.ஏ.எம்.பி.ஜயதிலக, வடமேல் மாகாண ICT பாட பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. அநுராதா இலன்கோன், புத்தளம் வலய கல்விப்பணிப்பாளர் திரு.ஆர்.எம்.டி.என்.ப்ரசாத், புத்தளம் வலய ICT பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.எம்.நௌசாத், புத்தளம் வடக்கு கோட்ட பணிப்பாளர் ஏ.எஸ்.நஸ்லியா பேகம், SDEC செயலாளர் எம்.எச்.எம்.ஹாபிழீன் மற்றும் பாடசாலையின் முகாமைத்துவ குழுவினர், ICT பாட ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ICT பாட மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.


இவ்வாய்வு கூடம் கிடைக்கப்பெற்றமை பாடசாலை ICT பாட மாணவர்களின் தகவல் தொழிநுட்ப அறிவை மேலும் மேம்படுத்தி அவர்களின் டிஜிட்டல் உலக பயனணத்திற்கு பெரும் துணையாக அமையும் என தெரிவித்த பாடசாலை அதிபர் சரீனா பர்வீன், இதனை அன்பளிப்பு செய்த Technocity நிறுவனத்திற்கு  மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.






















No comments