JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேச சபை என்.டி.எம் தாஹிர் சிறுவர் பூங்கா பூட்டு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் ஒரே ஒரு சிறுவர் பூங்கா கற்பிட்டி மண்டலக்குடா என்.டி.எம் தாஹிர் சிறுவர் பூங்காவாகும். மேற்படி சிறுவர் பூங்கா கடந்த 10 தினங்களாக பூட்டப்பட்டுள்ளது.


இது விடயமாக  பொது மக்கள் கருத்து தெரிவித்ததாவது பொது மக்களும் சிறுவர்களும் தமது மாலை நேர ஓய்வு நேரங்களை பாதுகாப்பாக கழிப்பதற்கு காணப்படும் ஒரே ஒரு இடமாகும் எனவும் மேற்படி சிறுவர் பூங்கா பூட்டப்பட்டுள்ளமை தமக்கு பெரும் கவலை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்


இது விடயமாக கற்பிட்டி பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும் கற்பிட்டி நகர் உறுப்பினர்களுக்கும் அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال