ஈரானில் உள்ள சமூக விரோதிகள் இப்போதாவது உணர்வார்களா ?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு விடுத்த கடும் எச்சரிக்கையானது ஈரான் மக்களைவிட உலக மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், "இன்றிரவு ஒரு முழு நாகரிகமும் அழிந்துவிடும், அது ஒருபோதும் திரும்ப வராது. இதை நான் விரும்பவில்லை, ஆனால் இது நிகழ வாய்ப்புள்ளது" என்று நாகரீகத்தை பற்றி கூறியுள்ளார்.
நீண்ட வரலாறுகளும், நாகரீகங்களும் இல்லாத அமெரிக்கா அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், ஈரானிய பாலங்கள், மின் நிலையங்கள் மற்றும் பிற பொது உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்று டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
இந்த எச்சரிக்கைக்கு மேலான கடும் தொனியிலான மிரட்டலானது அணு குண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி பலரது மனதிலும் தோன்றுகிறது.
ஏனெனில் உலக வரலாற்றில் அணு குண்டு தாக்குதல் நடத்தி இலட்சக் கணக்கான மக்களை கொலை செய்து வரலாற்றுச் சாதனை படைத்த நாடு அமெரிக்கா மாத்திரமே. இந்த சாதனையை வேறு எந்த நாடுகளினாலும் முறியடிக்க முடியவில்லை.
ஈரான் மக்கள் மீது அதீத அன்பும், பாசமும், காதலும் கொண்டுள்ள ட்ரம்ப், அண்மைய நாட்கள் வரை, ஈரானிய மக்கள் கஷ்டப்படுவதாகவும், அவர்களுக்கு அங்கு சுதந்திரமான வாழ்க்கை இல்லை என்றும், சர்வாதிகார மத ஆட்சி மூலம் ஈரானிய மக்களையும் குறிப்பாக பெண்களை அடக்கி ஆழ்வதாகவும் தொடர்ந்து இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டு உளரித்திரிந்தார். தற்போது ஈரானின் நாகரீகத்தை அழிக்க உள்ளதாக எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கை மூலம் ஈரானில் அமெரிக்க டொலர்களுக்கு விலைபோன சமூக விரோதிகள் ட்ரம்ப்பின் சுயரூபத்தை புரிந்திருப்பார்கள் என்று தோன்றுகின்றது.
முகம்மத் இக்பால்

No comments